நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த பெண்! அறுக்கப்பட்ட தலைமுடி... வெளிவரும் அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in இந்தியா

கேரளாவில் பெண்ணொருவர் கடற்கரையில் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்த சம்பவத்தில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மஞ்சேஸ்வரம் பகுதியை சேர்ந்த தம்பதி சந்திரசேகரன் - ரூபஸ்ரீ சந்திரசேகரன்

ரூபஸ்ரீ பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 16ஆம் திகதி பள்ளிக்கு சென்றபின்னர் பிறகு வீடு திரும்பவில்லை.

இதையடுத்து கணவரும், உறவினர்களும் ரூபஸ்ரீயை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் மஞ்சேஸ்வரம் கடற்கரையில் ரூபஸ்ரீ நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார். அவரது தலைமுடி அறுக்கப்பட்டு இருந்ததோடு உடலில் பல காயங்கள் இருந்தன.

இது குறித்து தகவலறிந்த பொலிசார் ரூபஸ்ரீ சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். அவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. இந்த சூழலில் ரூபஸ்ரீ செல்போன் சிக்னலை பொலிசார் ஆராய்ந்த போது அதில், கடைசியாக அவர் வெங்கட்ரமணா என்பவரிடம் பேசியது தெரியவந்தது.

இதையடுத்து வெங்கட்ரமணாவை கைது செய்து பொலிசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், நான் வேலைக்கு சேர்ந்த அதே வருடம் தான் ரூபஸ்ரீயும் வேலைக்கு சேர்ந்தார். நட்பாக பழகினோம், ஒரே பள்ளி என்பதால் எங்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் இருந்தது.

இது தொடர்பில் எங்களுக்குள் பிரச்சனை ஏற்பட்ட நிலையில் ரூபஸ்ரீயை அடிக்கடி சந்தித்து தொந்தரவு செய்து வந்தேன்.

சம்பவத்தன்று ரூபஸ்ரீ வீட்டுக்கு போய் அவரை பக்கெட்டில் உள்ள தண்ணீரில் மூழ்கடித்து கொன்றேன்.

அதன்பிறகு சடலத்தை காரில் கொண்டு சென்று கடலில் வீசினேன் என கூறியுள்ளார். தொடர்ந்து அவரிடம் பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்