ஆடு மேய்க்க சென்ற 9 வயது சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் ஆடு மேய்க்க சென்ற 9 வயது சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் வேண்டுராயபுரம் பகுதியில் வசித்து வருபவர்கள் கருப்பசாமி - ராஜலட்சுமி தம்பதி. இவர்களது மகள் வசந்த குருலட்சுமி (9).

இரு தினங்களுக்கு முன்பு வீட்டிற்கு அருகே உள்ள பகுதியில் தனது தங்கையுடன் ஆடு மேய்க்கச் சென்றுள்ளார் குருலட்சுமி.

பின்னர் தங்கை மட்டும் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வந்ததாக தெரிகிறது.

குருலட்சுமி நீண்ட நேரமாக வீட்டிற்கு வராத நிலையில் பல்வேறு இடங்களில் அவரை தேடிய பெற்றோர், இது குறித்து பொலிசில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் உறவினர்கள் சிறுமியை கடந்த 2 நாட்களாக தேடி வந்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை வீட்டின் அருகிலிருந்த கிணற்றில் சிறுமி சடலமாக கிடப்பதை கண்டுபிடித்தனர்.

கிணற்றிலிருந்து சிறுமியின் சடலத்தை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

பின்னர், குருலட்சுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துமனைக்கு அனுப்பப்பட்டது.

சிறுமி குருலட்சுமி சடலமாக மீட்கப்பட்டது குறித்து பொலிசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்