கமல்ஹாசன் படப்பிடிப்பில் மூன்று பேர் உயிரிழக்க காரணமாக இருந்த முக்கிய நபர் சிக்கினார்!

Report Print Raju Raju in இந்தியா

இந்தியன் 2 படப்பிடிப்பின்போது கிரேன் விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ஆபரேட்டர் ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பு நடந்து வந்த ஈவிபி ஸ்டுடியோஸில் கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, ப்ரொடக்ஷன் உதவியாளர் மது, ஆர்ட் அசிஸ்டன்ட் சந்திரன் ஆகியோர் உயிர் இழந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக தயாரிப்பு நிர்வாகி, கிரேன் உரிமையாளர், கிரேன் ஆப்ரேட்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மூவர் உயிரிழப்புக்கு முக்கிய காரணமாக இருந்த கிரேன் ஆப்ரேட்டர் ராஜன் தலைமறைவாக இருந்த நிலையில் பொலிசார் அவரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் பொலிசார் ராஜனை தற்சமயம் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து தொடர்பாக நடிகர் கமல், இயக்குநர் ஷங்கருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...