இவரது நடனத்தை பாருங்க.. டிக்டோக் பிரபலத்தையே கொந்தளிக்க செய்த இளைஞரின் செயல்! தூக்கி சென்று விசாரிக்கும் பொலிஸ்

Report Print Abisha in இந்தியா

தமிழகத்தில் டிக்டோக் என்ற பெயரில் பொது இடத்தில் இளைஞர் செய்த செயல் பலரையும் எரிச்சலடைய செய்துள்ளது.

தமிழகத்தில், டிக்டோக் மோகம் தலை விரித்தாடுகிறது. அதன்படி பலரும் தங்களது பொன்னான நேரத்தை டிக்டோக்கில் செலவளித்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டதை சேர்ந்த கண்ணன் என்ற இளைஞர் டிக்டோக் மூலம் வெளியிட்டுள்ள வீடியோ பலக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில், பொது இடத்தில் திடீரென்று புகும் கண்ணன், பெண்கள், முதியவர்கள் என்று யாரையும் பொருட்படுத்தாது, சினிமாவில் வரும் ஹீரோ போல் நடனம் ஆடுகிறார். இதனால், பல மக்கள் எரிச்சலடைந்து கடந்து செல்கின்றனர்.

இதை கண்ட பலரும் புகாரும் அளித்துள்ளனர். அதிலும், குறிப்பாக டிக்டோக் பிரபலமாக இருக்கு ஜி.பி.முத்து, கண்ணனை திட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “பொது போக்குவரத்தை இடையூறு செய்யும் நீ, ரயில் வரும் போது அதன் முன் குதித்து டிக்டோக் செய் அப்போது, வீடியோ சூப்பராக வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த வீடியோக்களை கவனித்த பொலிசார் கண்ணனை அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர்.

அதில், இளைஞன் பெயர் கண்ணன்(20) என்பதும், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்தவர் என்றும், ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்