ரஜினியை யார் என கேட்ட இளைஞர் பைக் திருட்டு வழக்கில் கைது!

Report Print Vijay Amburore in இந்தியா

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டின் போது பாதிக்கப்பட்ட மக்களை பார்ப்பதற்காக சென்ற ரஜினியை யார் என கேட்ட இளைஞர் இருசக்கர வாகன திருட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் திகதியன்று, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக போராடிய மக்கள் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களை சந்திப்பதற்காக சென்ற ரஜினியை, சந்தோஷ் என்கிற இளைஞர் நீங்கள் யார் என கேட்டார்.

அதற்கு, 'நான் தான்பா ரஜினி' என பதிலளித்தது இணையம் முழுவதும் வைரலாக பேசப்பட்டது.

இந்த நிலையில் ரஜினியை கேள்வி எழுப்பிய இளைஞர், சந்தோஷ் உட்பட 3 பேர் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ராம்குமார்(23) என்பவர் தனது வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை என பொலிஸில் புகார் கொடுத்திருந்துள்ளார்.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸார், சந்தோஷ்(23), மணி(23), சரவணன்(22) ஆகியோரை கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்