திருமண மண்டபத்திலிருந்து சிறுமியை கடத்தி சென்று சீரழித்து கொன்ற கொடூரன்! மரண தண்டனை விதித்து உத்தரவு

Report Print Raju Raju in இந்தியா
616Shares

இந்தியாவில் 6 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள குரும்பலகொட்டவில் திருமண மண்டபத்தில் கடந்த நவம்பர் மாதம் 6ஆம் திகதி திருமணம் ஒன்று நடந்து கொண்டிருந்தது.

அப்போது அங்கு வந்த முகமது ரபி (27) என்ற லொறி கிளினர் ஆறு வயது சிறுமிக்கு சாப்பிட திண்பண்டங்கள் வாங்கி கொடுத்து கடத்தி சென்றார்.

பின்னர் சிறுமியை பலாத்காரம் செய்த முகமது அவரை அடித்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்து அருகிலிருந்த சாக்கடை கால்வாயில் சடலத்தை வீசினார்.

இது தொடர்பாக பொலிசார் திருமண மண்டபம் அருகில் உள்ள சிசிடிவி கமெராவை ஆய்வு செய்த போது முகமது சிறுமியை கடத்தி சென்றது பதிவானது.

இதை வைத்து பொலிசார் தலைமறைவாக இருந்த முகமது ரபி-யை கைது செய்தனர்.

தென் இந்தியாவை உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை சித்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்நிலையில் கொடூரன் முகமது குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம் அவனுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.

அதன்படி முகமது இந்திய மரண தண்டனை சட்டப்படி தூக்கிலிடப்படவுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்