கலவர பூமியாக மாறி வரும் டெல்லியில் 20 பேர் பலி... என்ன காரணம்? முதல் முறையாக பேசிய நடிகர் ரஜினி

Report Print Santhan in இந்தியா

டெல்லியில் ஏற்பட்டு வரும் கலவரத்தை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சிஏஏவுக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் கலவரமாக மாறியதால், இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறிப்பாக இஸ்லாமியர்களை குறி வைத்து, இது நடப்பதால், சிஏஏ போராட்டத்த் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்டால் குரல் கொடுப்பேன் என்று கூறிய, ரஜினி இப்போது எங்கே என்று சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் அவர்களுக்காக முதல் ஆளாக நிற்பேன் எனக் கூறியிருந்தேன்.

டெல்லியில் ஏற்பட்ட வன்முறைக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம். போராட்டங்களை மத்திய அரசு இரும்பு கரம்கொண்டு அடக்கியிருக்க வேண்டும்.

சில கட்சிகள் மதத்தை வைத்து போராட்டங்களை தூண்டுகின்றன. நான் பா.ஜ.கவின் ஊதுக்குழல், பா.ஜ.க எனக்கு பின்னால் இருப்பதாக கூறுவது வருத்தமளிக்கிறது என்று கூறினார்.

மேலும், இந்த சம்பவத்தால் மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன். டெல்லி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படும்

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெறாது என கருதுகிறேன் இது போன்ற போராட்டங்களை ஆரம்பத்திலேயே மத்திய, மாநில அரசுகள் கிள்ளி எறிய வேண்டும் அமைதியாக போராட்டம் நடத்தலாம். ஆனால் வன்முறைக்கு இடம் கொடுக்க கூடாது என்று கூறி முடித்தார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்