ஆடை இல்லாமல்... முகம் சிதைந்த நிலையில் பெண்ணின் சடலம்: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் கொலை செய்யப்பட்டு நிர்வாண நிலையில் முகம் சிதைந்த பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவின் செவேல்லா நகருக்கு அருகே பெண் ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் நிர்வாண நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

தங்கடிபள்ளி பகுதியில் வசிப்பவர்கள் இந்தச் சடலத்தை இன்ரு காலை கவனித்துள்ளனர். விகராபாத் செல்லும் சாலையில் ஒரு பாலத்தின் கீழ் இவரைத் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ளனர்.

தகவலறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் குற்றம் எவ்வாறு நடந்தது என்பதற்கான ஆதாரங்களை சேகரித்தனர்.

இந்தக் கொலை குறித்து செவேல்லா காவல்நிலைய அதிகாரி பாலகிருஷ்ணா கூறுகையில், கொல்லப்பட்ட பெண் யார் என்பது தொடர்பில் அடையாளம் தெரியவில்லை.

குற்றத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து இதுவரை எந்தத் துப்பும் இல்லை எனக் கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக ஊர் பஞ்சாயத்து சார்பில் புகார் மனுவை பெற்றுள்ளோம். அதை வைத்து வழக்குப் பதிவு செய்வோம் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பொலிசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட பெண்ணை யாரோ கல்லால் அடித்து கொன்றதாகத் தெரிய வந்துள்ளது,

அவரது முகம் சிதைந்து போய் உள்ளதால் அவரை அடையாளம் காண்பது மிகவும் கடினம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கொலைக்கு முன்னதாக குறித்தப் பெண்ணிற்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளதா என எழுந்த கேள்விக்கு,

பிரேதப் பரிசோதனையின் அறிக்கை வெளிவந்ததும் இது குறித்து எங்களுக்கு கூடுதல் தெளிவு கிடைக்கும்.

குற்றம் நடந்த இடத்திலிருந்து கூடுதல் தடயங்களை நாங்கள் சேகரித்து வருகிறோம் எனக் கூறியுள்ளார்.

இந்தக் கொலை வேறு இடத்தில் நடந்திருக்கலாம் என்றும் அவரது உடல் பின்னர் இங்கு கொண்டு வந்து போடப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

கொலை நடந்த இந்தப் பகுதியை சுற்றியுள்ள சி.சி.டி.வி கமெராக்களை சோதனை செய்வதுடன், ஹைதராபாத் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் காணாமல் போனவர் குறித்த வழக்கு விபரங்களை தெரிவிக்கும்படி காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்