விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் இந்தியாவில் பரிதவிக்கும் வெளிநாட்டு ஜோடி

Report Print Vijay Amburore in இந்தியா

கொரோனா தீவிரத்தால் விமானங்கள் அனைத்தும் ரத்தம் செய்யப்பட்டதால் ரஷ்யாவை சேர்ந்த ஒரு ஜோடி, இந்தியாவில் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவை சேர்ந்த விக்டர் மற்றும் அன்னா என்கிற ஜோடி, மூன்று மாத சுற்றுப்பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர்.

கடந்த 23ம் திகதியன்று Air Astana விமானத்தின் மூலம் மீண்டும் மாஸ்கோ திரும்ப திட்டமிட்டிருந்துள்ளனர். ஆனால் கொரோனா தீவிரம் காரணமாக அவர்கள் செல்லவிருந்த விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவர்கள் கொண்டு வந்திருந்த பணம் முழுவதும் செலவாகிய நிலையில், நாடு திரும்ப முடியாமல் தவித்துள்ளனர். அவர்களுக்கு தென் இந்தியாவை சேர்ந்த சிலர் தங்குவதற்கு இடம் கொடுத்ததோடு, சாப்பிடுவதற்கு பணமும் கொடுத்து உதவி செய்துள்ளனர்.

உலகநாடுகள் அனைத்தும் தங்களுடைய எல்லைகளை மூடி இருப்பதால், தற்போது நாடு திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லாத நிலையில் தம்பதியினர் இந்தியாவில் தவித்து வருகின்றனர்.

விமான சேவை மீண்டும் துவங்கும்வரை இந்தியாவிலே வாழ்க்கையை கழிக்க வேண்டி இருப்பதால், தம்பதியினர் தற்போது இந்தியாவில் எடுத்த அனைத்து புகைப்படங்களையும், டெல்லியில் உள்ள பிரபல சுற்றுலாத்தளமான lodi garden பகுதியில் விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்