லண்டனில் இருந்து கொரோனா பாதித்த நபருடன் விமானத்தில் என் மகன் வந்தான்! தனிமையில் உள்ளான்... பிரபல நடிகர் தகவல்

Report Print Raju Raju in இந்தியா

லண்டனில் இருந்து வந்த தனது மகன் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரபல நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

தமிழில் தீனா, சமஸ்தானம், ஐ, தமிழரசன் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

சுரேஷ் கோபியின் மனைவி ராதிகா நாயர். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர். மூத்த மகன் கோகுல் சுரேஷ் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தனது இளைய மகன் கொரோனா காரணமாகத் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக நடிகர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார்.

அவர் தனியான அடுக்குமாடி வீடு ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ள அவர், என் இளையமகன் லண்டனில் இருந்து வந்தார். அவர் வந்த விமானத்தில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவரும் வந்திருந்தார்.

என் மகனுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்றாலும் மருத்துவர்கள் அறிவுரைப்படி அவர் கடந்த சில நாட்களாகத் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார்.

கொரோனாவின் தீவிரத்தை உணர்ந்துள்ளதால் நானும் எங்கும் செல்லாமல் தனியாக வீட்டிலேயே இருக்கிறேன். பொதுமக்களும் வீட்டை விட்டு எங்கும் செல்ல வேண்டாம் என்று சுரேஷ் கோபி கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்