உயிருக்கு போராடிய நாட்களிலும்!.. அன்னாசி பழத்திற்குள் வெடிவைத்து கொல்லப்பட்ட யானையின் இறுதி நிமிடங்கள்

Report Print Fathima Fathima in இந்தியா

கேரளாவில் அன்னாசி பழத்துக்குள் வெடிபொருட்களை வைத்து கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விவரிக்கையில்,

அந்த யானைக்கு சுமார் 14- 15 வயது இருக்கும், உயிருக்கு போராடிய கடைசி மூன்று நாட்களிலும் வெள்ளையாறு நதியை விட்டு வெளியே வரவில்லை.

வாய் மற்றும் தும்பிக்கை பகுதிகள் நீருக்குள்ளேயெ இருந்துள்ளது, வலி தெரியாமல் இருக்க அதிகளவு தண்ணீரை குடித்திருக்கலாம்.

யானையை மீட்க விரைவுக்குழுவோடு இரண்டு கும்கி யானைகளையும் பயன்படுத்தினோம், அறுவை சிகிச்சை செய்து யானையை காப்பாற்றவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது, ஆனால் அதற்குள் யானை இறந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.

யானையின் உடலை உடற்கூராய்வு செய்த பின்னர் தான் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து யானை புதைத்து இறுதி மரியாதை செலுத்திய அதிகாரிகள், இக்கொடூர சம்பவத்திற்கு காரணமான நபர்களை தேடிவருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்