7 வயது சிறுமி வன்கொடுமை செய்து படுகொலை: பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? ஹர்பஜன் சிங் வேதனை

Report Print Basu in இந்தியா

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏழு வயதுச் சிறுமி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு சுமார் 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மேலும், இக்கொடூர செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கேட்டு ரொம்ப கஷ்டமாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, செதஞ்ச அந்த பச்சப்புள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே. பெத்தவங்க எப்புடி துடிச்சிருப்பாங்க? எப்புடிடா இப்படிலாம் பண்ணுறீங்க! உலகம் அழியப்போகல.

.அழிச்சுக்கிட்டு இருக்கோம்.நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும் அப்புடின்னு சும்மா சொல்லிட்டுப் போகல.ரொம்ப கஷ்டமா இருக்குயா என வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்