கணவனை இழந்த பின்னர் மாமனார், மாமியாருடன் வசித்த 6 குழந்தைகளின் தாய்! கொலையாளியாக மாறியது ஏன்? அதிர்ச்சி பின்னணி

Report Print Raju Raju in இந்தியா

இந்தியவில் கணவனை இழந்த விதவை பெண் தனது மாமியாரை காதலன் உதவியுடன் கொலை செய்துள்ள சம்பவத்தின் பின்னணி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் ரஞ்சித் பஸ்வன். இவர் மனைவி கிரண் தேவி. இந்த தம்பதிக்கு 6 குழந்தைகள் உள்ளனர்.

ரஞ்சித் கடந்தாண்டு உயிரிழந்தார், இதையடுத்து மாமனார் ராம் பிரசாத், மாமியார் தருண் தேவி மற்றும் தனது குழந்தைகளுடன் கிரண் வசித்து வந்தார்.

இந்த நிலையில் சில காலமாக கிரணுக்கு ஜிதேந்திரா என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து இதற்கு தடையாக இருந்த மாமியார் தருண் தேவியை கொல்ல கிரண் முடிவு செய்தார்.

இதற்கான திட்டத்தை ஜிதேந்திராவுக்கு வகுத்து கொடுத்த கிரண் சில தினங்களுக்கு முன்னர் தனது மாமனார் ராம் பிரசாத்தை திட்டம் போட்டு கடைக்கு அழைத்து சென்றார்.

அப்போது தருண் தேவி வீட்டில் தனியாக இருந்த நிலையில் அங்கு வந்த ஜிதேந்திரா அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தார்.

பின்னர் ராம் பிரசாத் வீட்டுக்கு திரும்பிய போது மனைவி தருண் தேவி படுக்கையில் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கினார்கள்.

அதில் கிரண் தனது காதலர் ஜிதேந்திராவுடன் சேர்ந்து திட்டம் போட்டு மாமியாரை கொன்றதை பொலிசார் கண்டுபிடித்து இருவரையும் கைது செய்தனர்.

பொலிசார் கூறுகையில், கிரணின் கணவர் ரஞ்சித்தையும், இவர்கள் இருவரும் சேர்ந்து கொலை செய்திருக்கலாம் என கருதுகிறோம்.

அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, விரைவில் அது தொடர்பிலான உண்மைகளும் வெளியாகும் என கூறியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்