வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென தற்கொலை!... நடந்தது என்ன?

Report Print Fathima Fathima in இந்தியா
654Shares

பெற்றோர் திட்டியதால் வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது.

திருவண்ணாமலையின் சவேரியார்பாளையத்தை சேர்ந்த ஆனந்தன், கூலித் தொழிலாளியான இவரது மகள் சந்தியா(வயது 20).

அங்குள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி நர்சிங் படித்து வருகிறார், இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த போது மண்ணெண்ணைய் ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

சந்தியாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த உறவினர்கள் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.

90 சதவிகித தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட சந்தியாவுக்கு தொடர் சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில் பொலிசார் நடத்திய விசாரணையில், வீட்டு வேலைகள் செய்யாதது குறித்து திட்டியதால் கோபத்தில் தற்கொலை செய்து கொண்டதாக சந்தியாவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் வேறு ஏதும் காரணம் இருக்கிறதா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்