நடிகர் விஷால் பாஜக-வில் இணைகிறாரா? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

Report Print Basu in இந்தியா

நடிகர் விஷால் பாஜக-வில் இணைவிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் இதுகுறித்து அவரே விளக்கமளித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போன்ற பெரும் ஆளுமைகள் மறைவிற்கு பிறகு தமிழகத்தில் நடைபெறவுள்ள முதல் சட்டமன்றத்தேர்தல் இதுவாகும்.

2021 சட்டமன்றத்தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் முழுவீச்சில் ஆயுத்தமாகி வருகின்றன. 2021 சட்டமன்ற தேர்தலில் பாஜக கை காட்டும் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழலில் நடிகர் விஷால் பாஜக கட்சியில் இணைவிருப்பதாக தகவல்கள் வெளியானது.

அதாவது, விஷால் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனை நேரில் சந்திக்க நேரம் கேட்டதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், தான் பாஜக-வில் இணைவிருப்பதாக வெளியான தகவல் உண்மையில்லை என நடிகர் விஷால் விளக்கமளித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு காலியான ஆர்.கே.நகர் தொகுதியில் 2017 ஆம் நடந்த இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார், எனினும், அவரது மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது என்பது நினைவுக்கூரத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்