திருமணமான பெண்ணின் புகைப்படத்தை வைத்து இளைஞன் செய்த மோசமான செயல்! கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் பேக்கரியில் பெண் ஒருவர் கொடுத்த செல்போன் எண்ணை தவறாக பயன்படுத்தி இளைஞர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவேற்காடு அர்ஜுனமேடு பகுதியைச் சேர்ந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன் தவறான அழைப்புகள் வந்தபடி இருந்துள்ளன.

இது குறித்து அவர் கணவரிடம் கூற, அந்த பெண்ணின் கணவர் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு, இது தொடர்பாக அவரே விசாரணையில் இறங்கியுள்ளார்

அப்போது செல்போனில் பேசியவர்களிடம் கணவர் விசாரித்த போது, ஆபாச இணையதளத்தில் இருந்து தான் செல்போன் போன் நம்பர் கிடைத்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக அந்த ஆபாச இணையதளப் பக்கத்தில் சென்று பார்த்த போது, அவர் மனைவியின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டு, அந்த புகைப்படத்தின் மேல் செல்போன் நம்பரும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மனைவியின், புகைப்படத்தை பதிவேற்றியவனின் செல்போன் எண்ணைக் கண்டுபிடிப்பதற்காக பெண்ணின் கணவர், ஆண் குரலை பெண் குரலாக மாற்றும் செயலி மூலமாக அவனிடம் பெண் குரலில் பேசியுள்ளார்.

இதைக் கேட்டு, பேசுவது பெண் என்றே நினைத்து தனது புகைப்படத்தையும் வேலை செய்யும் இடத்தின் விவரங்களையும் அந்த நபர் அனுப்பியுள்ளான்.

இதையடுத்து விசாரித்த போது, அந்த நபர் அதே பகுதியில் இயங்கி வரும் நிக்கி கேக் ஷாப் என்ற கடையில் பணிபுரியும் வெங்கடேசன் என்பது தெரியவந்தது.

சில தினங்களுக்கு முன் உறவினர் பிறந்தநாளுக்காக சம்மந்தப்பட்ட பெண் அந்த கடைக்கு கேக் ஆர்டர் கொடுக்கச் சென்றுள்ளார்.

கேக்கை டெலிவரி செய்வதற்கு செல்போன் எண் வேண்டும் எனக் கேட்டு அந்தப் பெண்ணின் எண்ணை வாங்கிய வெங்கடேசன், அவரின் வாட்சப் DP-யில் இருந்து புகைப்படத்தை எடுத்து ஆபாச இணையதளத்தில் பதிவேற்றியது தெரியவந்தது.

இதனையடுத்து பெண்ணின் உறவினர்கள் வெங்கடேசனைப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்