இந்தியாவில் 6 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபின் ஹோஷியார்பூர் மாவட்டத்திலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜலல்பூர் கிராமத்தை சேர்ந்த குர்பரீத் என்ற நபர் 6 வயது குழந்தையை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அவரது தாத்தா குழந்தையை கொன்று உடலைக் எரிக்க உதவியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் பாதி எரிந்த உடல் குற்றவாளிகளின் ஜலல்பூர் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்ட குர்பிரீத் சிங் மற்றும் அவரது தாத்தா சுர்ஜித் சிங் மீது கொலை மற்றும் போக்ஸோ சட்டம் ஆகிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ஹோஷியார்பூரில் 6 வயது குழந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவம் மிகவும் வருத்தமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.
பொலிசார் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்த போதிலும், முறையான விசாரணையை உறுதி செய்யுமாறு டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளேன்.
விரைவான விசாரணை நடத்தி மற்றும் குற்றவாளிகளுக்கு முன்மாதிரியான தண்டனை வழங்க வேண்டும் என்று பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் நீதிமன்றத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.