திருமணமான நபருடன் பழக்கம்!சிறுவனை கொன்று சூட்கேஸில் பார்சல் செய்த பெண்ணின் தீடீர் முடிவு: சோகத்தில் குடும்பம்

Report Print Santhan in இந்தியா
1216Shares

தமிழகத்தில் காதலனை பழிவாங்குவதற்காக நான்கு வயது சிறுவனை கொன்று சூட்கேஸில் பார்சல் செய்த பெண், தற்போது நைஜீரியா இளைஞனை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, சாலிகிராமத்தில் வசித்து வந்தவர் ஜெயக்குமார். 43 வயதான இவருக்கு அனந்தலட்சுமி என்ற 40 வயது மனைவியும், நிவேதா என்ற 16 வயது மகளுடன், ஆதித்யா என்ற 4 வயது மகனும் இருந்தனர்.

ஜெயக்குமார் தனியார் இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் மேலாளராக, வேலை பார்த்து வந்தார். இதே நிறுவனத்தில், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த, பூவரசி என்ற 36 வயது பெண் வேலை பார்த்து வந்தார்.

இவர், வேப்பேரியில், தனியார் விடுதியில் தங்கி இருந்தார். இந்நிலையில் ஜெயக்குமார் மற்றும் பூவரசிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட, இருமுறை பூவரசி கர்ப்பமாகி உள்ளார்.

ஆனால்,ஜெயகுமார் திருமணம் செய்ய மறுத்ததுடன், கர்ப்பத்தையும் கலைத்து விடும்படி கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த பூவரசி, ஜெயக்குமார் மகன் ஆதித்யாவுடன் நல்லவள் போல பழகி, கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூலை, 17 ஆம் திகதி தன்னுடைய விடுதிக்கு அழைத்துச் சென்று, கொலை செய்து, சிறுவனின் சடலத்தை சூட்கேசில் பார்சல் செய்து, அதன் பின், புதுச்சேரியில் இருந்து, நாகை செல்லும் பேருந்தில் அந்த பார்சலை விட்டு விட்டு, சென்னை திரும்பியுள்ளார்.

அதைத் தொடர்ந்து சிறுவனை மர்ம நபர்கள் கடத்தி விட்டதாக பூவரசி, ஜெயக்குமாரிடம் நாடகமாடியுள்ளார். இருப்பினும் பூவரசி மீது சந்தேகம் அடைந்த பொலிசார் அவரை விசாரித்து கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

ஆயுள் கைதியாக இருக்கும் சிறையில் இருக்கும் பூவரசி, தற்போது 35 வயதான, நைஜீரிய வாலிபரை காதலித்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

பூவரசியுடன் சிறையில் இருந்த பெண் ஒருவர், தற்போது வெளியே வந்துள்ளார்.

அப்பெண் கூறுகையில், போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான பெண் ஒருவர், சிறையில் பூவரசியுடன் அடைக்கப்பட்டு இருந்தார்.அந்தப் பெண் வாயிலாக, டில்லியில் தங்கியுள்ள, நைஜீரிய வாலிபருடன், பூவரசிக்கு காதல் ஏற்பட்டது.

அவரும், போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்தவரா என, தெரியவில்லை. வழக்கு நடத்துவதற்காக, பூவரசி குடும்பத்தார், பல லட்சம் ரூபாயை செலவழித்து, வறுமையில் சிக்கி தவிக்கின்றனர்.

திருந்தி விடுவார் என்ற நம்பிக்கையில் இருந்தவர்களுக்கு, பூவரசியின் முடிவு, தலையில் கல்லை துாக்கி போட்டது போலாகி விட்டது.

பரோலில், செப்டம்பர் 5-ஆம் திகதி முதல் 7-ஆம் திகதி வரை வெளியே வந்திருந்த பூவரசி, அந்த நைஜீரிய வாலிபரை திருமணம் செய்வது குறித்து பேசியுள்ளார். அதற்கான முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளதால், பூவரசியின் குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல், கடும் சோகத்தில் இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்