ஆண் மருத்துவர் தனிமையில் இருக்க வற்புறுத்தினார்! தூக்கில் தொங்கிய திருமணமான இளம் நர்ஸ் விவகாரத்தில் வெளிவரும் பகீர் தகவல்கள்

Report Print Raju Raju in இந்தியா

இந்தியாவில் திருமணமான 28 வயது நர்ஸ் தற்கொலை செய்த சம்பவத்தில் புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் சூரத்தை சேர்ந்தவர் மேகா ஆச்சார்யா (28). திருமணமான இவர் அங்குள்ள சிவில் மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்தார், மேகாவின் கணவர் வேறு ஊரில் தங்கி வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் மேகா அதிகாலையில் தனது வீட்டில் துப்பாட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.

மேகா பணிபுரியும் மருத்துவமனையின் மருத்துவர்கள், தலைமை நர்ஸ்களின் துன்புறுத்தலால் அவர் இம்முடிவை எடுத்தார் என முதற்கட்ட விசாரணையில் தெரிந்தது.

இந்த நிலையில் மேகா எழுதி வைத்திருந்த கடிதத்தின் முழு விபரம் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் மருத்துவர் அவினாஷ் துபேடன் தான் தனிமையில் இருக்க வற்புறுத்தப்பட்டதாகவும், அதற்கு தான் தொடர்ந்து மறுத்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தாரா மற்றும் வனிதா என்ற இரண்டு நர்ஸ்களும் அனினாஷுடன் நான் தனிமையில் இருக்க வேண்டும் என கூறி துன்பிறுத்தினார்கள் என எழுதியுள்ளார்.

இதோடு கணவன் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதும் தன்னை மிகுந்த மன அழுத்தத்தில் ஆழ்த்தியது என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக சிலரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்