சிறிது நேரத்துக்கு முன் சிரித்து பேசிய மனைவிக்கு நேர்ந்த கதி! கதறிய கணவன்.. வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா
1263Shares

இந்தியாவில் கணவனுடன் பைக்கில் சென்ற மனைவி விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவர் மனைவி ரூபி. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

ஜிதேந்திரா லக்னோவில் காய்கனி வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் மனைவி மற்றும் குழந்தைகளை காண ஜிதேந்திரா கிராமத்துக்கு வந்தார்.

பின்னர் மனைவி குழந்தைகளை பைக்கில் உட்கார வைத்து கொண்டு வெளியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் எதிரில் வந்த கார் ஜிதேந்திரா பைக் மீது வேகமாக மோதியது.

இதில் நால்வரும் தூக்கிவீசப்பட்டனர், பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்டனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி ரூபி உயிரிழந்தார், மற்றவர்கள் சிறிய காயத்துக்கு சிகிச்சை பெற்றனர்.

சில நிமிடங்களுக்கு முன்னர் தன்னுடன் சிரித்து பேசி கொண்டிருந்த ரூபி இரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு ஜிதேந்திரா கதறி அழுதது காண்போர் மனதை கலங்கடித்தது.

இந்த விபத்து சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்