பேரறிவாளன் விரைவில் விடுதலை? ஆளுநர் சென்னை திரும்பியதும் அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்

Report Print Raju Raju in இந்தியா
343Shares

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைப்பதால் பேரறிவாளன் விரைவில் விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட 7 தமிழர்கள் 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

அவர்களின் விடுதலை தொடர்பில் தமிழக ஆளுநர் முடிவு எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

ஆனால் தமிழக ஆளுநர் பன்வாரிலால் இன்னும் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளார்.

இந்த நிலையில் டெல்லி சென்றுள்ள ஆளுநர், சென்னை திரும்பியதும் பேரறிவாளன் விடுதலை குறித்த அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி கிடைப்பதால் பேரறிவாளன் விரைவில் விடுதலையாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்