இரயிலில் மனைவியை தனியாக அனுப்பி வைத்த கணவனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! எச்சரிக்கை செய்தி

Report Print Santhan in இந்தியா
2304Shares

இரயிலில் செல்லும் போது காணமல் போன மனைவியை, மூன்று நாட்கள் போராடி கணவன் கண்டுபிடித்த சம்பவம் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலம் பாலாசூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திர ஜனா (28). இவருக்கு கபீர் ஜனா என 27 வயதில் மனைவி உள்ளார்.

இந்நிலையில், இந்த தம்பதி புதுச்சேரியில் தங்கி அங்குள்ள மேட்டுப்பாளையம் எனும் பகுதியில் தனியார் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தனர்.

இவர்களது மகன் ஆகாஷ் ஒடிசாவில் பாட்டியுடன் தங்கி படித்து வருகிறான். ஆண்டிற்கு ஒருமுறை இவர்கள் சென்று மகனைப் பார்த்து வருவது வழக்கம்.

இம்முறை கபீரை மட்டும் கடந்த 9-ஆம் திகதி புதுச்சேரியில் இருந்து புவனேஸ்வர் செல்லும் ரயிலில் மாலை 6.45 மணிக்கு ரவீந்திர ஜனா அனுப்பிவைத்துள்ளார்.

மறுநாள் மாலை ரயில் ஒடிசாவைச் சென்றடைந்ததும் கபீர் இல்லாததை அறிந்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனால் உடனடியாக தனது மனைவியைக் காணவில்லை என புதுச்சேரி ஒதியன்சாலை காவல் நிலையத்தில் ரவீந்திர ஜனா புகார் தெரிவித்திருந்தார்.

மேலும் அவரும் நேரடியாக ஒரு கார் மூலம் ஒடிசா மாநிலத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். வழி முழுவதும் 3 நாட்களாய் ஒவ்வொரு ரயில் நிலையமாக மனைவியைத் தேடிச் சென்றுள்ளார்.

இறுதியாக ஒடிசா மாநிலத்திற்கு உட்பட்ட பாலேஸ்வர் என்ற பகுதியில் கபீரின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பாலேஸ்வர் ரயில் நிலையத்தில் விசாரித்தபோது, மயங்கிய நிலையில் ஒரு பெண்ணை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன் பின் மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது மனைவி கபீர் அங்கு இருந்துள்ளார்.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, ரயிலில் பயணித்த முதியவர் ஒருவர் வாழைப்பழம் கொடுத்ததாகவும் அதை வேண்டாம் என்று கூறியபோது தந்தையைப் போன்று இருக்கும் தன்னிடம் வாங்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் இதனால் வாழைப்பழத்தை கபீர் சாப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மயக்க மருந்து கலந்து கொடுத்த அந்தப் பழத்தைச் சாப்பிட்ட சில நிமிடங்களில்கபீர் மயக்கமடைந்துள்ளார். இதனை அடுத்து அவர் அணிந்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

பாலேஸ்வர் பகுதி காவல் நிலையத்தில் இந்தக் கொள்ளை தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. காணாமல்போன மனைவியை மூன்று நாட்களாய் அலைந்து திரிந்து கணவரே கண்டுபிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,

அதுமட்டுமின்றி பயணத்தின் போது, அடையாளம் தெரியாத நபர் எந்த ஒரு சாப்பிடும் பொருள் கொடுத்தாலும், சாப்பிடக் கூடாது என்பதற்கு இது ஒரு உதாரணம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்