பரிதாபம் காட்டிய தம்பி மனைவியை கொடூரமாக குத்தி கொலை செய்த நபர்! துடி துடித்து இறந்த துயர சம்பவம்

Report Print Santhan in இந்தியா
410Shares

தமிழகத்தில் கடன் பிரச்சனை காரணமாக தம்பி மனைவியை அண்ணன் கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் ஈவிஎஸ் நகரைச் சேர்ந்த தம்பதி சுந்தரமூர்த்தி (37)-சொர்ணப்ரியா (30). இந்த தம்பதிக்கு பெங்களூருவில் வேலை பார்த்து வந்தனர்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில், கொரோனா காரணமாக சொந்த ஊர் திரும்பிய இவர்கள் வீட்டில் இருந்த படி வேலை செய்து வந்துள்ளனர்.

சுந்தர மூர்த்திக்கு ராஜகோபால் (40) என்ற அண்ணன் உள்ளார். இவர் மனைவி மற்றும் இரண்டு மகன்களுடன் தம்பியின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

ராஜகோபால் சொந்தமாக நர்சரி பள்ளி ஒன்றை நடத்தி வரும் நிலையில், அப்பள்ளியின் தாளாளராக அவரது மனைவி வசந்தா செயல்பட்டு வந்தார்.

இந்நிலையில், பள்ளியை மேற்படி நடத்துவதில் பணம் தேவைப்பட்டதால் தம்பியின் மனைவியான சொர்ணப்ரியாவிடம் அவ்வப்போது ராஜகோபால் கடன் வாங்கி வந்துள்ளார்.

இப்படி 15 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்றுள்ளார். கணவனின் அண்ணனுக்கு முடிந்த வரை பண உதவி செய்து வந்த சொர்ணபுரியாவுக்கு அண்மையில் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதனால், கொடுத்த பணத்தை ராஜகோபாலிடம் சொர்ணப்ரியா கேட்டுள்ளார். அப்போது ராஜகோபாலை சொர்ணப்ரியா தகாத வார்த்தையால் திட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜகோபால், சொர்ணப்ரியாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அதற்காக புதிய கத்தியை வாங்கி வந்த அவர், கடந்த செவ்வாய்க்கிழமை சொர்ணப் ப்ரியா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து உள்ளே சென்று, தொண்டையில் கொடூரமாக குத்தியுள்ளார்.

இதனால் சொர்ணப் ப்ரியா சம்பவ இடத்திலே துடி துடிக்க இறந்துள்ளார், இதையடுத்து, கொலை செய்ய பயன்படுத்திய கத்தியுடன் ராஜகோபால் அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார்.

பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்