சசிகலாவுக்கு கார் கொடுத்து உதவியது ஏன்? அதிமுக நிர்வாகி கொடுத்த விளக்கம்: கோபத்தில் ஈ.பி.எஸ்-ஒ.பி.எஸ்?

Report Print Santhan in இந்தியா
0Shares

தமிழகம் திரும்பிய சசிகலாவுக்கு அதிமுக நிர்வாகி எஸ்.ஆர்.சம்பங்கி கார் கொடுத்து உதவியதால், அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், ஏன் நான் அப்படி செய்தேன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பிய சசிகலாவுக்கு அதிமுக நிர்வாகியும், எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளருமான எஸ்.ஆர். சம்பங்கி தன்னுடைய இன்னோவா கார் கொடுத்து உதவினார்.

சசிகலாவின் கார் இடையிலே பழுதானதால், அவர் கொடுத்து உதவியதாக கூறப்பட்டது.

ஆனால், அவர் கழக் கட்டுப்பாட்டை மீறியதால், கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்று முன் அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில், சசிகலாவுக்கு கார் கொடுத்தது ஏன் என்பது பற்றி எஸ்.ஆர். சம்பங்கி விளக்கம் அளித்துள்ளார்.

அதில், சசிகலா சென்னை சென்று கொண்டிருந்த போது அவரது கார் பழுதானதால் மனிதாபிமான அடிப்படையில் தனது காரை கொடுத்தேன்.

சாலையில் செல்லும் போது வாகன பழுது ஏற்பட்டு யாராவது நின்றால் நீங்கள் உதவமாட்டீர்களா என்ற கேள்வியையும் முன்வைத்தார்.

சசிகலாவுக்கு கார் கொடுத்தது முழுக்க முழுக்க மனிதாபிமான அடிப்படையிலேயே தவிர வேறு உள்நோக்கம் இல்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், தான் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து என்னுடைய வழக்கறிஞரிடம் பேசி இருப்பதாகவும், இந்த விவகாரத்தை சட்டப்படி சந்திப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும் எஸ்.ஆர்.சம்பங்கியின் இந்த செயலால் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முதல்வர் பழனிச்சாமி கடும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்