10 வயதிலேயே அந்த பெண்ணுக்கு இருந்த பிரச்சினை! நெருங்கிய உறவில்.. மகள்களுக்கு நிர்வாண பூஜை நடத்தி நரபலி தந்த சம்பவத்தில் திடுக் தகவல்

Report Print Raju Raju in இந்தியா
0Shares

இந்தியாவில் மகள்களுக்கு நிர்வாண பூஜை நடத்தி நரபலி கொடுத்த விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்களுக்கு இருந்த பிரச்சினை தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆந்திராவின் மதனப்பள்ளியை சேர்ந்த புருஷோத்தம் நாயுடு - பத்மஜா தம்பதி தங்களது மகள்களான அலெக்யா (25) மற்றும் சாய் திவ்யா (22) ஆகியோரை நரபலி கொடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட புருஷோத்தம் நாயுடு - பத்மஜா ஆகிய இருவரும் சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தம்பதிக்கு மருத்துவம் பார்க்கும் மனநலமருத்துவர்கள் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்த குடும்பத்தினருக்கு shared delusional disorder என்ற மனநோய் பிரச்சினை இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

அதாவது இல்லாத மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி கொள்ளும் பிரச்சினை அவர்களுக்கு இருந்திருக்கிறது.

நெருங்கிய உறவில் இருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களிடையே ஒரு மாயையை பகிர்ந்து கொள்ளும் வினோத மனநோய் இதுவாகும்.

மேலும் இல்லாத ஒன்று இருப்பது போலத் தோன்றும் பிரமையால் புருஷோத்தம் நாயுடு - பத்மஜா தம்பதியின் மகள்களில் ஒருவர் 10 வயதிலேயே பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்திருக்கிறார் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

எப்படியிருந்தாலும் தம்பதியின் மனநல நிலை குறித்த இறுதி அறிக்கைகள் வந்த பின்னர் தான் இது தொடர்பிலான முழுமையான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்