மாமியாரும், மனைவியும் ரொம்ப கேவலமாக என்னை டார்ச்சர் பண்றாங்க! என்னால முடியல... வீடியோவை வெளியிட்டு உயிர்விட்ட கணவன்

Report Print Raju Raju in இந்தியா
0Shares

இந்தியாவில் மனைவி, மாமியார், மாமனார் துன்புறுத்தலை பொறுக்க முடியாமல் கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

பீகாரில் தான் இந்த பரிதாபமான சம்பவம் நடந்துள்ளது.

ராஜா கேசரி (30) என்பவருக்கும் ரோஷினி என்ற பெண்ணுக்கும் மூன்றாண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கணவர் ராஜாவை அவர் பெற்றோரிடம் இருந்து பிரித்து தனது வீட்டுக்கு ரோஷினி அழைத்து சென்றார். இந்த சூழலில் சில தினங்களுக்கு முன்னர் ராஜா தனது வீட்டருகில் உள்ள ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இறப்பதற்கு முன்னர் ஒரு வீடியோவை பதிவு செய்து தனது பெற்றோருக்கு அனுப்பியிருக்கிறார் ராஜா.

அதில், என் மாமியார் வீட்டில் மனைவி உட்பட அனைவரும் என்னை அடித்து துன்புறுத்தி மிக கேவலமாக டார்ச்சர் செய்கிறார்கள்.

என்னை கைதி போல அடைத்து வைத்து உணவு, தண்ணீர் கூட கொடுக்காமல் கொடுமைப்படுத்தினார்கள்.

இனியும் என்னால் உயிர் வாழ முடியாது என கூறியிருக்கிறார்.

இந்த நிலையில் ராஜா மரணம் தொடர்பாக அவர் மனைவி மற்றும் குடும்பத்தாரை கைது செய்ய கோரிக்கை எழுந்துள்ள நிலையில் அவர் உறவினர்கள் கதறி அழும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

பொலிசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்