உடனடியாக பாஸ்வேர்டை மாற்றுங்கள்: 33 கோடி பேருக்கு டுவிட்டரின் மெசேஜ்

Report Print Kavitha in இன்ரர்நெட்
172Shares
172Shares
ibctamil.com

உங்களது டுவிட்டர் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றி விடுங்கள் என 33 கோடி பேருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளது டுவிட்டர் நிறுவனம்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அனைத்து பயனாளர்களின் பாஸ்வேர்டும் தொழில்நுட்பப்புலம் ஒன்றில் சேமிக்கப்பட்டுள்ளது.

இதனால் சிலரது பாஸ்வேர்ட்கள் டுவிட்டரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு தெரிந்துவிட்டது, இந்த கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு சரிசெய்யப்பட்டுவிட்டது.

எனினும் பாதுகாப்புக்காக உங்களது பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ளுங்கள் என டுவிட்டர் நிறுவனம் எச்சரிக்கை செய்தி அனுப்பியுள்ளது.

இந்த கோளாறு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும், இனிமேல் இதுபோல் நடக்கமால் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்