Google Duo இனை இப்போது இணையத்தளத்திலும் பயன்படுத்தலாம்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

கூகுள் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட HD வீடியோ சட்டிங் வசதியே Google Duo ஆகும்.

மொபைல் ஆப்பிளிக்கேஷன்கள் ஊடாகவே இச் சேவை இதுவரை வழங்கப்பட்டு வந்தது.

ஆனால் முதன் முறையாக தற்போது இணைய உலாவிகளின் ஊடாகவும் பயன்படுத்தக்கூடியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதனால் கூகுள் குரோம், சபாரி மற்றும் பயர்பாக்ஸ் போன்ற இணைய உலாவிகளில் இச் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எனினும் மைக்ரொசொப்ட்டின் எட்ஜ் இணைய உலாவியில் இச் சேவையினைப் பெற முடியாது.

இணைய உலாவிகளில் Google Duo சேவையைப் பெறுவதற்கு https://duo.google.com/about/ எனும் இணையத்தளத்திற்கு விஜயம் செய்யவும்.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers