தற்கொலை (Suicide) பற்றி அமேஷனில் தேடினால் இனி இதுதான் நடக்குமாம்

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

இணையத்தளங்களின் ஊடாக எவ்வாறு தற்கொலை செய்வது என்பதை தேடிப்பெறுகின்ற அதேவேளை ஒன்லைன் ஸ்டோர்களில் தற்கொலை செய்வதற்கான பொருட்களை கொள்வனவு செய்வதற்கும் பயனர்கள் முனைகின்றனர்.

இதற்கிணங்க அமேஷான் தளத்தில் Suicide எனும் சொல்லினை கொண்டு தேடும் பயனர்களுக்கு உதவும் முகமாக புதிய திட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த தேடுதலின்போது பயனர்களுக்கு உதவும் முகமாக தொலைபேசி இலக்கங்கள் காண்பிக்கப்படும்.

குறித்த இலக்கங்களுக்கு தொடர்புகொள்வதன் ஊடாக அமேஷான் தளத்திடமிருந்து நேர்மறையான தகவல்களைப் பெற முடியும்.

இதேபோன்ற வசதியானது ஏற்கனவே கூகுள், பேஸ்புக் மற்றும் டுவிட்டர் என்பவற்றில் தரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்