இணையப் பாவனையாளர்கள் எண்ணிக்கையில் 2 ஆம் இடத்தில் இந்தியா! முதலிடம் யாருக்கு தெரியுமா?

Report Print Givitharan Givitharan in இன்ரர்நெட்

உலக அளவில் இணையப் பாவனையாளர்களின் எண்ணிக் தற்போது வெகுவாக அதிகரித்துள்ளது.

இதன்படி இந்தியாவில் தற்போது 451 மில்லியன் மக்கள் இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு உலக அளவில் அதிக இணையப் பாவனையாளர்கள் உள்ள நாடுகளில் வரிசையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளதாகவும், முதலிடத்தில் சீனா காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை Internet and Mobile Association of India (IAMAI) வெளியிட்டுள்ளது.

மேலும் 451 மில்லியன் மாதாந்த இணையப் பாவனையாளர்களுள் 385 மில்லியன் வரையானவர்கள் 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் எனவும், எஞ்சிய 66 மில்லியன் வரையானவர்கள் 5 தொடக்கம் 11 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

5 தொடக்கம் 11 வயது வரையானவர்கள் தமது பெற்றோரின் சாதனங்களைப் பயன்படுத்தியே இணையப் பாவனையை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன்ரர்நெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்