குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை!

Report Print Gokulan Gokulan in குழந்தைகள்

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையில் பராமரிப்பது அவசியமானது ஒன்றாகும்.

அந்தவகையில் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க பெற்றோர்கள் பராமரிக்க வேண்டிய முறைகள் என்னென்ன என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.

 • பிறந்து 6 மாதம் வரை குழந்தைகளுக்கு தாய்பால் அவசியம். தாய்பாலில் அதிக அளவு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது.
 • பிறந்து 3 மாதம் வரை குழந்தைகளை புகைப்படம் எடுக்காதீர்கள். செல்போன் மற்றும் கேமராவில் வரும் பிளாஷ் குழந்தைகளின் கண்பார்வையை கூட பறித்து விடலாம்..
 • குழந்தைகளின் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அவர்களுக்கு சளி, இருமல், வயிற்றுப்போக்கு ஏற்படும். அந்த காலக்கட்டத்தில் குழந்தைகளுக்கு மருத்துவர்கள் பரிந்துரையில் தடுப்பூசிகளை போடுவது அவசியம்.
 • குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க அடிக்கடி வீட்டை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
 • கோதுமை, பிஸ்தா, முந்திரி, பாதாம், கீழ்வரகு போன்ற தானியங்களை வறுத்து பொடி செய்து பாலில் காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம்.
 • ஆப்பிளின் தோலை நீக்கி குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து வரலாம்.. ஆப்பிளை சாப்பிடாத குழந்தைகளுக்கு ஆப்பிளை வேகவைத்து மசித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
 • குழந்தைகளை அடிக்கடி அடிக்க கூடாது. அப்படி செய்தால் குழந்தைகளின் மனநிலைமை பாதிக்கப்படும்.
 • குழந்தைகளை இரவு நேரங்களில் சினிமாவுக்கு கூடிக்கொண்டு போக கூடாது. சில நேரங்களில் குழந்தைகள் சாப்பிடாமல் தூங்கிவிடுவார்கள்.
 • முடிந்த வரை குழந்தைகள் இருக்கும் வீட்டில் வீட்டு பிராணிகளை வளர்ப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் பிராணிகளுக்கு அவ்வப்போது மருத்துவர்களிடம் பரிசோதிக்க வேண்டும். வீட்டு பிராணிகளிடமிருந்து குழந்தைகளுக்கு சில தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 • 4 அல்லது 5 சொட்டு புதினா எண்ணையோடு தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வர சளி, மூக்கடைப்பு சரியாகும்.
 • பீன்ஸ், கேரட், பீட்ரூட் போன்ற காய்கறைகளை பருப்பில் சேர்த்து வேகவைத்து குழந்தைகளுக்கு கொடுத்து வர வேண்டும்.
 • குழந்தைகள் தூங்கும் வரை பால் பாட்டில் கொடுக்க கூடாது. அப்படி பால் பாட்டிலை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்தால் முறையற்ற பற்கள் வளர ஆரம்பிக்கும்.
 • குழந்தைகளுக்கு பிரஸ் செய்வதற்கும், வாய் கொப்பளிப்பதற்கும் பெற்றோர்கள் கற்று தர வேண்டும். சுத்தமான தண்ணீரில் வாய் கொப்பளிக்க செய்ய வேண்டும். ஒருவேளை குழந்தைகள் விழுங்கி விட்டார்கள் என்றால் கூட பிரச்சினை இல்லை.

மேலும் குழந்தைகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்