வளி மாசடைதலால் வாழ்நாள் காலம் குறைவடையும் அபாயம்

Report Print Givitharan Givitharan in வாழ்க்கை முறை
வளி மாசடைதலால் வாழ்நாள் காலம் குறைவடையும் அபாயம்

மோசமடைந்து வரும் வளி மாசடைதல் காரணமாக சீனர்களின் எதிர்பார்க்கை ஆயுட்காலம் கடந்த இரு வருடங்களாக குறைவடைந்துள்ளதாக இவ் வாரம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அறிக்கை சர்வதேச சக்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் வெளிச் சூழல் மாசு காரணமாக கிட்டத்தட்ட 1 மில்லியன் முதிராத இறப்புக்கள் இடம்பெறுவதாகவும், அதே நேரம் வளி மாசு காரணமாக 1.2 மில்லியன் உயிர்கள் ஒவ்வொரு வருடமும் பாதிக்கப்படுவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இதன் படி வளி மாசடைதல் காரணமாக சீனர்களின் சராசரி ஆயுட்காலம் 25 மாதங்களால் குறைந்துள்ளது.

ஏறத்தாள 50 விதமான சீன குடித்தொகையினர் வளி தரம் கட்டுப்படுத்தப்படாத இடங்களிலேயே வசித்து வருகின்றனர்.

இதனால் வெளி மாசு, வீட்டச் சூழல் மாசு காரணமாக முறையே 1.5 மில்லியன், 1 மில்லியன் வரையில் இறப்புகள் நிகழக் கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

74 முக்கிய நகரங்களில் வெறும் 8 நகரங்களே சீனாவில் வளித் தராதர கட்டுப்பாட்டு நடவடிகைகளுக்கு உட்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments