கையில் இப்படி இருக்கா? உங்க குணம் இதுதானாம்

Report Print Fathima Fathima in வாழ்க்கை முறை

ஒருவர் கையில் உள்ள ரேகைகள், குறிகள் வைத்து அவர்களது வாழ்க்கை கணித்து கூறப்படும்.

ஆரோக்கியம், செல்வம், வேலை, திருமணம் என பலவற்றை கணிக்கலாம்.

இப்போது உங்களது உள்ளங்கையின் அடிபாகத்தில், கட்டை விரலுக்கு எதிர்புறத்தில் உள்ள குறிகள் பற்றியும், அதன் பலன்கள் பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.

செவ்வகம்

செவ்வகமாக இருந்தால் அவர் பாதுகாப்பு மற்றும் தைரியம் நிறைந்தவராக இருப்பார், தங்களை சுற்றி இருப்பவர்களை பாதுகாப்பாக உணரச்செய்வார்.

உறவுகளை உலகம் என வாழ்வதுடன், எந்த எல்லைக்கும் சென்று ஆபத்தில் இருப்பவர்களை காப்பாற்றக் கூடியவர்கள்.

முக்கோணம்

இவர்களது சிந்தனை மற்றும் கருத்து பல கோணங்களை கொண்டிருக்கும், எனவே மற்றவர்களிடம் இருந்து தனித்து காணப்படுவார்கள்.

என்ன தடைகள் வந்தாலும் அதை வித்தியாசமான கோணத்தில் அணுகி தீர்வை கண்டுபிடிக்கும் திறன் படைத்தவர்கள்.

திரிசூலம்

தைரியாக முடிவுகளை எடுக்கும் இவர்கள் எதையும் நேரடியாக அணுகுவார்கள், இதனாலேயே பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

இவர்களின் கருத்துகள், அறிவாற்றல் மற்றும் சிந்தனைகள் தெளிவானதாக இருக்கும்.

வட்டம் / புள்ளி

தங்களுக்கு லட்சியங்களுக்காக உழைக்ககூடிய இவர்கள், உறுதியான முடிவுகளை எடுப்பார்கள்.

மனதில் என்ன இருக்கிறதோ அதை அப்படியே வெளிப்படுத்தும் தன்மை உடையவர்கள்.

நட்சத்திரம்

இவர்களது வாழ்வின் ஒருநாள் சாதகமாகவும், ஒருநாள் பாதகமாகவும் இருக்கும், திறமையானவர்கள், ஆனால் வெற்றி பெற காத்திருக்க வேண்டும்.

எக்ஸ் குறியீடு

அனைத்தும் சரியாக இருக்க வேண்டும் என்ற குணம் கொண்டவர்கள், எதற்காகவும் தலைவணங்க மாட்டார்கள்.

மேலோட்டமாக எதையும் பார்க்காமல் ஆராய்ந்து சிறப்பான விடயமான முடித்துக் காட்டுவார்கள், முயற்சியே இவர்களது ப்ளஸ்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers