புகைப்படத்தால் ஐஸ்வர்யா ராய் குறித்து வைரலாகும் செய்தி

Report Print Deepthi Deepthi in வாழ்க்கை முறை

அபிஷேக்பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராய், கோவா கடற்கரையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலானதையடுத்து அவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில், ஐஸ்வர்யாராய் வயிறு கர்ப்பமடைந்திருப்பது போல் இருப்பதால் இந்த வதந்தியை நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர்.

ஆனால், இது வதந்தியான செய்தி என்றும் இதில் உண்மையில்லை. ஏனெனில் சமீபத்தில் அம்பானி திருமணத்தில் ஐஸ்வர்யா ராய் கலந்துகொண்ட போது அதுகுறித்த வதந்திகள் எழவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இதுபோன்று ஐஸ்வர்யா ராய் குறித்து செய்தி பரவுவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது. இதற்கு முன்னர் பலமுறை இதுபோன்ற செய்தி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஸ்வர்யா - அபிஷேக் தம்பதியினருக்கு ஆரத்யா என்ற மகள் உள்ளார்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers