இந்த அறிகுறிகள் இருந்தாலும் கொரோனாவாக இருக்கலாம்!.. ஓர் எச்சரிக்கை செய்தி

Report Print Fathima Fathima in வாழ்க்கை முறை

உலக நாடுகளையே நடுநடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது கொரோனா எனும் கொடிய வைரஸ்.

இவ்வைரசால் உலகம் முழுவதும் 5 லட்சம் மக்கள் பலியாகியுள்ளனர், இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சமே மக்கள் மத்தியில் இருக்கிறது.

இந்நிலையில் நோய் கட்டுப்பாட்டு மையங்கள் கொரோனாவின் புதிய அறிகுறிகளை சேர்த்துள்ளன.

காய்ச்சல், இருமல், மூச்சுத் திணறல் உள்ளிட்டவை கொரோனா அறிகுறிகளாக குறிப்பிடப்பட்ட நிலையில், குளிர், தசை வலி, தலைவலி, தொண்டை புண், வாசனை நுகர்வு தன்மையில்லாமை உள்ளிட்டவற்றையும் பட்டியலில் இணைத்தனர்.

தற்போது கொரோனா அறிகுறிகளாக புதிய மூன்று அறிகுறிகளை நோய் கட்டுப்பாட்டு மையங்கள் அறிவித்துள்ளன.

அதன்படி மூக்கு ஒழுகுதல், குமட்டல், வயிற்றுப்போக்கு உள்ளிட்டவை இருந்தாலும் அதுவும் கொரோனாவுக்கான அறிகுறிகளாக இருக்கலாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

2- 14 நாட்களுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அது கொரோனாவுக்கான அற்குறிகளாக இருக்கலாம் என எச்சரித்துள்ளனர்.

மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்