திருமணத்திற்கு முந்தைய காதல்- மனைவியின் விரும்பத்தை நிறைவேற்ற கணவனின் திரைப்படத்தை மிஞ்சிய செயல்!

Report Print Abisha in வாழ்க்கை

இந்தியாவில், மத்திய பிரதேஷம் மாநிலம் போபாலை சேர்ந்த நபர் ஒருவர் தன் மனைவியின் காதலுக்காக திருமண வாழ்க்கையை தியாகம் செய்திருக்கிறார்.

போபாலை சேர்ந்த மகேஷ் என்பவர் software engineer-ஆக பணிபுரிந்து வருகிறார். மகேஷ் சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சங்கீதா கடந்த 7வருடங்களாக fashion designer பணிபுரிந்து வருகிறார்.

அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் சென்று கொண்டிருந்த குடும்பத்தில் திடீரென்று மகேஷ்க்கு தெரிந்த உண்மை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சங்கீதா திருமணத்திற்கு முன் மற்றொருவருடன் காதலில் விழுந்துள்ளார். அதற்கு சங்கீதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், மகேஷை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், சங்கீதா தன்னிடம் திரும்ப வருவார் என்று எண்ணி அவரை காதலித்த நபர் திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்துள்ளார். இதனை அறிந்த சங்கீதாவிற்கு அவருடன் இணைந்து வாழ ஆசை ஏற்பட்டுள்ளது.

இதை அனைத்தையும் அறிந்து கொண்ட மகேஷ் இருவரின் புரிதலோடு பிரிய முடிவு செய்துள்ளார். அதன்படி நீதிமன்றத்தை நாடிய அவர்களுக்கு சில காலம் மனநல ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும், சங்கீதா அவரது காதலரை திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததால், தற்போது விவாகரத்து பெற இருவரும் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி குழந்தைகளை மகேஷ் பார்த்து கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும், சங்கீதா குழந்தைகளை எப்போது வேண்டுமானாலும் வந்து பார்த்து செல்லலாம் என்றும் அவர் அனுமதி அளித்துள்ளார். இச்சம்பவம் அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் வாழ்க்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்