வெளிநாட்டில் சாப்பாடு கூட கிடைக்காமல் கண்ணீர் சிந்திய தமிழர்கள்: நல்ல காலம் பிறந்தது

Report Print Deepthi Deepthi in மலேசியா

மலேசியாவில் கொத்தடிமைகளாக இருந்த 48 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த 48 தமிழர்கள் தனியார் நிறுவனம் மூலம் மலேசியாவிற்கு சென்றுள்ளனர்.

அங்கு அவர்களுக்கு உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி என தெரிவிக்கப்பட்டது.

அங்கு சென்றவர்களுக்கு நிறுவனத்தினர் தங்க இடம் கொடுத்து பணி கொடுத்துள்ளனர். முதல் ஒரு மாதம் அனைத்தும் நல்ல படியாக சென்றுள்ளது. முதல் மாதம் சம்பளம் மட்டும் தொழிலாளர்களுக்கு அந்த நிறுவனம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக சாப்பாடு மற்றும் சம்பளம் கொடுக்காமல் நிறுவனத்தினர் தமிழக தொழிலாளர்களை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் அவர்கள் பட்டினியால் வாடியுள்ளனர். ஒரு வேளை சாப்பாடு மட்டுமே கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த தொழிலாளர்களை சம்பவம் பற்றி வெளியே தகவல் தெரிவித்து விடக்கூடாது என அவர்களை கண்காணிக்க சிலரை நிறுவனம் நியமனம் செய்துள்ளது. இதன் காரணமாக வெளியில் தகவல் கூட தெரிவிக்க இயலாமல் தொழிலாளர்கள் சிரமப்பட்டுள்ளனர்.

48 தொழிலாளர்களும், தங்கள் சோகத்தை செல்போனில் வீடியோ எடுத்து தங்கள் ஊரில் உள்ளவர்களுக்கு அனுப்பியுள்ளனர்.

அந்த வீடியோ சங்கரன்கோவில் பகுதியில் உள்ள அனைவருக்கும் பரவியது. அவர்களது உறவினர்கள் அனைவரும் சோகத்துடன் காணப்பட்டனர். இதனால் பெரும்பாலான வீடுகளில் இந்த முறை தீபாவளி பண்டிகை கூட கொண்டாடப்படவில்லை.

இந்நிலையில் அந்த வீடியோ மலேசியாவிலும் பரவ தொடங்கியது. இது அங்குள்ள தமிழ் வம்சாவளி எம்.எல்.ஏ. காமாட்சி துரைராஜிற்கும் சென்றது. அவர் உடனே தமிழக தொழிலாளர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் வீடியோ மூலம் அவர்களது உறவினர்கள் அனைவரும் பயப்பட வேண்டாம். இந்த தொழிலாளர்கள் அனைவரையும் மீட்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்ததையடுத்து உறவினர்கள் சந்தோஷம் அடைந்துள்ளனர்.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்