ஒரே நாளில் 8 லட்சம் டொலர் செலவு செய்த பிரதமர்: அம்பலமான தகவல்

Report Print Arbin Arbin in மலேசியா

ஆடம்பர நகையை வாங்க மலேசியாவின் முன்னாள் பிரதமர் தனது கிரெடிட் கார்டு மூலம் ஒரே நாளில் 8 லட்சம் அமெரிக்க டொலர் செலுத்திய விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் தனது பதவி காலத்தில், மலேசிய மேம்பாட்டு நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.70 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மட்டுமின்றி அவரும், அவரது மனைவியும் லஞ்ச பணத்தில் ஆடம்பர பொருட்களை வாங்கி குவித்ததும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர் தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அவர் மீதான ஊழல் வழக்கு விசாரணை வேகம் பெற்றது.

அவர் மீது 3 நம்பிக்கை மோசடி வழக்குகளும், ஒரு அதிகார துஷ்பிரயோக வழக்கும் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நஜீப் ரசாக் இத்தாலியில் இருந்து ஒரு ஆடம்பர நகையை வாங்க தனது ‘கிரெடிட் கார்டு’ மூலம் ஒரே நாளில் 8 லட்சம் அமெரிக்க டொலர் செலுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்ற விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் மலேசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்