மாரடைப்பை முன்பே கணிக்கும் கருவி: சாதனை படைத்த தமிழக மாணவன்

Report Print Raju Raju in மருத்துவம்

மாரடைப்பை முன்பே கணிக்கும் கருவியை கண்டுப்பிடித்த தமிழக மாணவனுக்கு இந்திய குடியரசு தலைவர் விருது வழங்கி கொளரவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் ஓசூரை சேர்ந்தவர் ஆகாஷ் மனோஜ். பள்ளி மாணவரான இவர் மாரடைப்பை முன்பே கண்டறியும் கருவியைக் கண்டுபிடித்துள்ளார்.

அவர் சாதனையை கொளரவிக்கும் விதத்தில் இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகாஷுக்கு ராஷ்ட்ரபதி நவ பிரவர்த்தன் புரஸ்கார்' விருதை வழங்கி கொளரவித்துள்ளார்.

இது குறித்து மாணவர் ஆகாஷ் கூறுகையில், சின்ன வயதிலிருந்தே எனக்கு மருத்துவ அறிவியலில் ஈடுபாடு உண்டு.

பல அறிவியல் கண்காட்சிகளில் என் புராஜெக்ட்களுக்காக பல பரிசுகள் வாங்கியிருக்கேன்.

நான் வடிவமைத்திருக்கும் மாரடைப்பு கருவி தோலில் ஒட்டக்கூடியது.

இதிலிருந்து சின்னதாக ஒரு பாசிட்டிவ் மின்சாரத் தூண்டுதல் (Electrical impulse) வெளியாகும்.

அது, இதயத்துல இருந்து ஹார்ட் அட்டாக் வரப்போறதுக்கான எச்சரிக்கையை நமக்கும் உணர்த்தும்.

இந்த திட்டத்தை அரசே ஏற்றால் 900 ரூபாய்க்கு இந்த கருவி கிடைக்கும் என ஆகாஷ் கூறுகிறார்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments