உங்களுக்கும் இப்படி இருக்கிறதா? இயற்கையான முறையில் மருவை நீக்கலாம்

Report Print Kabilan in மருத்துவம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உள்ள முக்கிய பிரச்சனைகளில் ஒன்று மரு.

உடலின் அழகினை கெடுக்கும் இந்த மருக்களை இயற்கையான முறையில் எளிதில் அகற்றலாம்.

அதற்கான வழிமுறைகள் இதோ, இரண்டு வாரங்களுக்கு, ஒரு துண்டு இஞ்சியை மரு உள்ள இடத்தில் தேய்த்து வர, மருவானது தானாகவே தளர்ந்து உதிர்ந்துவிடும்.

 • ஆளி என்ற விதையை அரைத்து, தினமும் மருவின் மீது தடவி வர, நாளடைவில் மரு கொட்டிவிடும்.
 • கற்பூர எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை குழைத்து பூசி வர, நாளடைவில் மரு கொட்டிவிடும்.
 • அன்னாசி பழத்தின் சாற்றை எடுத்து, அதனை மரு உள்ள இடத்தில் தேய்த்து, 20-25 நிமிடங்களுக்கு ஊற வைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும், பத்து நாட்களுக்கு இப்படி செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

 • சரும பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கும் சுண்ணாம்பினை நன்றாக குழைத்து மருவின் மீது தடவி வந்தால் மரு தானாக பொரிந்து விழுந்துவிடும்.
 • உருளைக்கிழங்கினை மசித்து, பசை போல ஆக்கி தினமும் தடவி வர, மருவானது பொரிந்துவிடும்.
 • வெங்காய சாற்றினைக் கொண்டு தேய்த்தாலும் மருக்கள் மறையும். மேலும், வெங்காயத் துண்டின் மீது உப்பு தேய்த்து இரவில் ஊற வைத்து, காலையில் பேஸ்ட் போல அரைத்து, அதனை மருவின் மீது தடவி ஊற வைத்து கழுவினால் நல்ல பயன் கிடைக்கும்.

 • ஆப்பிள் சீடர் வினிகர், மிக எளிதாக கிடைக்கும் இதனை மரு உள்ள இடத்தில் பருத்தி கொண்டு தேய்த்து வந்தாலும், மரு விரைவில் உதிர்ந்துவிடும்.
 • சருமத்தை சோப்பு கொண்டு கழுவி விட்டு, பின்னர் டீ ட்ரீ ஆயிலை மரு உள்ள இடத்தில் தடவ வேண்டும். இதனால் சிறிது எரிச்சலும், வலியும் இருக்கும். எனினும், தினமும் இதனை மூன்று முறை செய்து வந்தால் மருக்களானது எளிதில் உதிர்ந்துவிடும்.

 • எலுமிச்சை சாற்றினைக் கொண்டு மரு உள்ள இடத்தில் தடவி 15 நிமிடங்களுக்கு ஊற வைத்து கழுவினால் மருக்கள் உதிரும்.
 • பூண்டு சாற்றினை மருக்கள் இருக்கும் இடத்தில் தடவி, ஒரு துணியைக் கொண்டு கட்டி 20 நிமிடங்கள் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனை தினமும் மூன்று முறை செய்ய வேண்டும்.
 • கற்றாழைச் சாற்றினை தினமும் மருவின் மீது தடவி வர, மரு உதிர்ந்து விடும்.
 • மேலும், அம்மான் பச்சரிசி என்னு மூலிகையின் பாலை, தினமும் மருவின் மீதும், முகப்பருக்கள் மீதும் தடவி வந்தால் நல்ல பலனை விரைவில் அளிக்கும்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்