இந்த அற்புத மூலிகையை எங்கு பார்த்தாலும் மிஸ் பண்ணிடாதீங்க!

Report Print Kabilan in மருத்துவம்
524Shares
524Shares
ibctamil.com

கீழாநெல்லி கீரையைப் போல பல நன்மைகளை கொண்ட மேலாநெல்லி மூலிகை இலையை பற்றி இங்கு காண்போம்.

மேலாநெல்லி மூலிகையில், கீழாநெல்லியைப் போன்ற இலைகளின் பின்புறம், நடுத்தண்டுகளில் நீண்ட காம்புகளுடன் காய்கள் காணப்படும். இலைக்காம்பில் பூக்கள் மலர்ந்திருக்கும். இதன்மூலம் இந்த மூலிகையை அடையாளம் காண முடியும்.

இந்த மூலிகையில் காய்கள் தண்டில் ஒட்டி வளராமல், காம்புகள் மூலமாக தணித்து வளர்வதால் இதற்கு ‘மேலாநெல்லி’ என்றும், ‘நிலநெல்லி’ என்றும் பெயராகும்.

மேலாநெல்லியின் மூலமாக கிடைக்கும் ஏராளமான நன்மைகள் குறித்து காண்போம்.

மேலாநெல்லியில் காணப்படும் பில்லாந்தின் எனும் வேதிச்சத்து, சிறுநீர்த்தாரை கடுப்பு, கல்லீரல் வியாதிகள், தலைவலி, காது வலி போன்ற பாதிப்புகளை குணப்படுத்த பயன்படும்.

சிறுநீர் கடுப்பு

சிறுநீர் கடுப்புக்கு மேலாநெல்லி மூலிகை சிறந்த தீர்வாகும். மேலாநெல்லி இலையை உள்ளங்கையளவு எடுத்து, அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மூன்று தம்ளர் நீரில் இதனை நன்றாக சுண்டக் காய்ச்சி, வடிகட்டி பருகி வர சிறுநீர் கடுப்பு குணமாகும்.

தலைவலி

மேலாநெல்லியின் தண்டு மற்றும் இலைகளை நன்கு காயவைத்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த சாற்றினை தினமும் காலையில் பருகி வர தலைவலி, தலையில் நீர் கோர்த்து ஏற்பட்ட தலைபாரம் தீர்ந்துவிடும். மேலும் ஆஸ்துமா பாதிப்புகளும் அகலும்.

மலச்சிக்கல்

மேலாநெல்லி வேர்களை நன்கு காயவைத்து, கைப்பிடி அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு தம்ளர் நீரில் இட்டு காய்ச்சி, அரை தம்ளர் ஆக சுண்டியவுடன் அதனை வடிகட்டி பருக வேண்டும். இதன்மூலம், மலச்சிக்கல் நீங்குவதுடன் வயிற்றுப் போக்கும் குணமாகும்.

வாத நோய்

வாத நோய்க்கு மேலாநெல்லி அருமருந்தாகும். மேலாநெல்லி இலைகளை நசுக்கி, எலுமிச்சை சாற்றில் தோய்த்து, உடலில் வாத பாதிப்புகள் உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். இதன்மூலம் வாத நோய் பாதிப்புகள் நீங்கும்.

பசியின்மை

மேலாநெல்லி செடியை காய வைத்து பொடியாக்கி, அதனை நீரில் கலந்து காய்ச்சி பருகி வர, உணவில் ஏற்பட்ட வெறுப்பு மறைந்து, நன்கு பசி எடுக்கும்.

இதர பயன்கள்
  • பெண்களின் மாதவிலக்கு பாதிப்புகளுக்கு மேலாநெல்லி இலை தீர்வு தரும்.
  • சீரான மாதவிலக்கு சுழற்சிக்கு மேலாநெல்லி பொடி கலந்த பாலை பருக வேண்டும்.
  • மேலாநெல்லி வேர் கசாயம் ஆண்களின் விதைப்பை வீக்கம், இதய பாதிப்புகள் போன்றவற்றுக்கு தீர்வளிக்கும்.
  • உடல் வலிப்பு, மன தளர்ச்சி பாதிப்புகளை களையும் தன்மை மேலாநெல்லி இலையில் உள்ளது.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்