கொரோனாவால் இந்தியர்கள் அதிகளவில் பாதிக்கப்படாதது ஏன்? எய்ம்ஸ் மருத்துவரின் விளக்கம்

Report Print Gokulan Gokulan in மருத்துவம்

எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் நரேந்திர குமார் வர்மா இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறித்து பேட்டி அளித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டி பின்வருமாறு,

இந்திய மக்களுக்கு பொதுவாக அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அளவுக்கு அதிகமான நுண் கிருமிகள் உடலில் கலந்திருப்பதே நோய் எதிர்ப்பு சக்தி காரணம்.

ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை ஒப்பிடுகையில், இந்தியாவில் ஆஸ்துமா, எய்ட்ஸ், மலேரியா போன்ற நோய்கள் கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டனர்.

பலவிதமான வைரஸ், பாக்டீரியாக்கள், ஒட்டுண்ணிகளால் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கெட்டதிலும் ஒரு நன்மை உள்ளது.

அதிக வைரஸ் பாதிப்பு காரணமாக, இந்தியர்களின் உடலில் குறிப்பிட்ட T-செல்கள் உருவாகின்றது. இதை T-உயிரணுக்கள் என்றுகூட குறிப்பிடலாம். அந்நிய வைரஸிடமிருந்து, நம் உடலை பாதுகாப்பதில் இந்த வைரஸ் போர் வீரரனைப் போன்று செயல்படுடகிறது.

வெளியில் இருந்து வரும் புதுவிதமான வைரஸ்களை நம் உடலில் நுழைய விடாமல் இந்த T-செல்கள் தாக்கி அழிக்கின்றன.

இதனால்தான் கொரோனா இந்தியாவில் தீவிரமாக பரவவில்லை. சுத்தம், சுகாதாரத்தோடு வாழும் ஐரோப்பா, அமெரிக்க நாட்டினருக்கு இது போன்ற T-செல்கள் குறைவாக இருப்பதால் வைரஸ் நோய்களிலிருந்து அவர்களால் மீள முடியவில்லை.

இந்தியாவில், குளோரோகுயின், ஹைட்ராக்ஸோ குளோரோகுயின் மருந்துகளை அதிகள் அளவில் பயன்படுத்தியுள்ளனர்.

இந்த மருந்துகளின் வீரியம், இன்றளவும் இந்தியர்களின் உடலில் இருக்கின்றது. இது இப்போது அவர்களுக்கு எதிர்பாரத பலனை அளித்து வருகிறது.

பொதுவாகவே இந்தியர்களில் உணவில் மசால் மற்றும் நறுமணப் பொருட்களை சேர்க்கின்றனர்.

மஞ்சள், மிளகு, சீரகம், பூண்டு, இஞ்சி, திப்பிளி, ஏலக்காய், கிராம்பு, புதினா, ஜாதிக்காய், கருஞ்சீரகம், இப்படி எல்லாவிதமான மருத்துவப் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள்.

இவை அனைத்திற்கும் தனி தனி மருத்துவ குணங்கள் கொண்டது. இதனால் மனிதர்களுக்கு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இந்தியர்களுக்கு இயற்கையாக உடலில் உள்ளது.

இதை அலோபதி மருத்துவர்கள் கூட மறுக்கின்றனர். டெங்கு பரவிய போது, நிலவேம்பு குடிநீர் பயன்படுத்தப்பட்டது.

அதே போன்று இப்போது இந்தியாவில், நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுவதற்கு கபசூர குடிநீர் வந்துவிட்டது. பல வித இந்திய நறுமணப் பொருட்களை கொண்டு தயாரானது தான் இந்த கபசூர குடிநீர்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாட்டவர்கள் சீனர்களுடன் ஒப்பிடும் போது, அன்றாட உணவில் இந்தியர்கள் சேர்த்து கொள்ளும்,பொருட்கள் கொரோனாவில் இருந்து அவர்களை பாதுகாக்கிறது என்பதுதான் உண்மை.

உடலுக்குன் நோயேதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், மரபணுக்களின் அமைப்புதான் இம்முனி சிஸ்டம் (Immunue Syste) வைரஸ்களை அழித்து நம்மை உயிர் காக்கும்.

இம்முனி சிஸ்டத்தின் அங்கம் ஹெச்.எல்.எ ஜீன், இந்த மரபணுக்களின் வேலை என்ன என்றால், உடலில் அந்நிய வைரஸ் நுழைந்தால், ஹெச்.எல்.எ மரபணுக்கள் அடையாளம் கண்டு உடனடியாக இம்முனி சிஸ்டத்தை உஷார் படுத்தி அந்த வைரஸ் வேரோடு அழித்துவிடும்.

அதை தொடர்ந்து T-செல்கள் போர் வீரனாக செயல்பட்டு, அந்நிய வைரஸ்களை அழித்து கொழிக்கும். இதில் ஹெச்.எல்.இ மரபணுக்களின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பல வித வைரஸ் கிருமிகளால், பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களின் உடலில், சில குறிப்பிட்ட வகையான ஹெச்.எல்.எ அணுக்கள், அதிக அளவில் உள்ளன.

அது போன்ற ஹெச்.எல்.எ மரபணுக்கள், ஐரோப்பிய, அமெரிக்க, சீன மக்களின் இம்முனி சிஸ்டத்தின் குறைவு தான், இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்