உடலின் மூலை முடுக்குகளில் இருக்கும் புழுக்களை அழிக்க இதை சாப்பிடுங்க?

Report Print Nalini in மருத்துவம்
4121Shares

ஒருவரது வயிற்றில் புழுக்கள் அதிகம் இருந்தால், அது மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்திவிடும்.

நம் குடலில் உள்ள பொதுவான புழு வகைகளான உருளைப்புழுக்கள், ஊசிப் புழுக்கள், நாடாப்புழுக்கள் போன்றவை உருவாகும்.

உடலில் நுழையும் இந்த புழுக்கள் குடலை இருப்பிடமாக கொண்டு, நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களை உறிஞ்சி உயிர் வாழ்ந்து, நமக்கு ஊட்டச்சத்து குறைபாடுகளை உண்டாக்கி விடும்.

எனவே அவ்வப்போது நம் உடலையும், குடலையும் சுத்தம் செய்ய வேண்டியது முக்கியம்.

இப்போது குடலில் உள்ள புழுக்களை அழிக்கும் சில மருத்துவ முறைகளைப் பற்றி பார்ப்போம்

பழுக்காத பப்பாளி

ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில், 1 டேபிள் ஸ்பூன் பழுக்காத பப்பாளி கூழ் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து பருக வேண்டும். இப்படி தினமும் என ஒரு வாரம் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், ஒரு நல்ல மாற்றத்தை நாம் பார்க்கலாம்

மஞ்சள்

மஞ்சளில் ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் இயற்கையாக இருக்கின்றன. இது அனைத்து வகையான குடல் புழுக்களையும் நீக்க உதவி செய்யும்.

அதற்கு ஒரு டம்ளர் மோரில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் குடிக்கலாம். இதனால் உடலில் இருந்து புழுக்கள் வெளியேறும்.

வேப்பிலை

வேப்பிலையை நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில், 1/2 டீஸ்பூன் வேப்பிலை பேஸ்ட்டை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடித்து வரலாம். இப்படி சில நாட்கள் குடித்து வந்தால், உடலில் இருந்து புழுக்கள் அனைத்து வெளியேறும்.

கிராம்பு

கிராம்பில் உள்ள ஆன்டி-செப்டிக் மற்றும் ஒட்டுண்ணி எதிர்ப்பு பண்புகள், உடலில் உள்ள புழுக்கள் மற்றும் அதன் முட்டைகளை அழிக்குமாம். அதற்கு ஒரு கப் நீரில் 2 அல்லது 3 கிராம்பைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தினமும் 3-4 முறை என ஒரு வாரம் தொடர்ந்து குடிக்கலாம்.

மேலும் மருத்துவம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்