சிறுவர்கள் முன்னிலையில் மரண தண்டனையை நிறைவேற்றிய ஐ.எஸ்

Report Print Aathi Aathi in மத்திய கிழக்கு நாடுகள்
சிறுவர்கள் முன்னிலையில் மரண தண்டனையை நிறைவேற்றிய ஐ.எஸ்

ஐ.எஸ் தீவிரவாதிகள் ஓரினச் சேர்க்கையாளரான வாலிபர் ஒருவரின் கண்களை கட்டி, சிறுவர்கள் முன்னிலையில், 5 மாடி கட்டிடம் ஒன்றின் மீது இருந்து கீழே தள்ளி கொலை செய்துள்ளனர்.

அலெப்போ மாகாணத்தில் உள்ள Manbij என்ற இடத்தில் சிரியாவைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் ஓரினச் சேர்க்கையாளர் என்பதை அறிந்த ஐ.எஸ் தீவிரவாதிகள், அவருக்கு கொடூர தண்டனை அளிக்க முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து குழந்தைகள் உட்பட அப்பகுதி மக்கள் அனைவரையும் அந்த கட்டிடம் முன்பு கூட வைத்துள்ளனர்.

அங்குள்ள முழுதும் கட்டி முடிக்கப்படாத கட்டிடம் ஒன்றின் 5வது மாடி மீது அந்த வாலிபரின் கண்களை கட்டி, வெறும் கால்களுடன் இழுத்துச் சென்றுள்ளனர்.

அங்கிருந்து அந்த வாலிபரை முகமூடி அணிந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதையடுத்து கீழே விழுந்த வாலிபர் மீது கீழே கூடியிருந்த மக்களை கற்களை கொண்டு தாக்க ஐ.எஸ் அமைப்பினர் உத்தரவிட்டுள்ளனர்.

இந்த கொடூர தண்டனையால் அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது இது தொடர்பான புகைப்படங்களை ஐ.எஸ் அமைப்பினர் வெளியிட்டுள்ளனர்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments