சவுதி வரலாற்றில் முதல் முறையாக

Report Print Deepthi Deepthi in மத்திய கிழக்கு நாடுகள்

சவுதியில் பெண்களும் கார் ஓட்டலாம் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடந்த ஜூன் 24-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்த நிலையில், சவுதி வரலாற்றில் முதல் முறையாகப் பெண்கள் துணை விமானியாகப் பணியமர்த்தப்பட உள்ளனர்.

ரியாத்தைச் சேர்ந்த ஃப்ளைநஸ் என்ற ஏர்லைன் நிறுவனம், முதல் முறையாகத் துணை விமானி மற்றும் விமான சேவையாளர்கள் பணிக்கு பெண்களை நியமனம் செய்வதற்காக, சமீபத்தில் விளம்பர அறிவிப்பை வெளியிட்டது.

இந்தப் பணிக்காக 1,000 பெண்கள் விண்ணப்பித்திருந்தனர். இதன்மூலம், விமான போக்குவரத்துத் துறையில் சவுதிப் பெண்கள் கால்பதிக்க உள்ளனர்.

முகமது பின் சல்மான். இளவரசராகப் பதவியேற்ற பின் பெண்களின் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சீர்திருத்த நடவடிக்கைகளை அதிரடியாக மேற்கொண்டுவருகிறார்.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்