சவுதி சரமாரி தாக்குதல் பின்னணியில் தெஹ்ரான்: தீவிர பேருக்கு தயார்... அமெரிக்காவிற்கு சவால் விடுத்த ஈரான்

Report Print Basu in மத்திய கிழக்கு நாடுகள்

ஈரானுக்கும் அமெரிக்காவுக்கு இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் அதை மேலும் அதிகரிக்கும் வகையில் ஈரானிய விண்வெளிப் படைகளின் தளபதி Amir Ali Hajizadeh பேசியுள்ளார்.

ஈரான் எப்போதுமே தீவிரமான போருக்கு தயாராக உள்ளது என Amir Ali Hajizadeh கூறியதாக மேற்கோளிட்டு Tasnim நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரானைச் சுற்றி 2,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அனைத்து அமெரிக்க தளங்களும் அவற்றின் விமானம் தளங்களும் எங்கள் ஏவுகணைகளின் எல்லைக்குள் உள்ளன என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று Hajizadeh எச்சரித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்தில் இரண்டு சவுதி அரம்கோ எண்ணெய் நிறுவனங்கள் மீது ட்ரோன் தாக்குதலுக்கு ஏமனின் ஈரான் ஆதரவு ஹவுத்தி போராளிகள் பொறுப்பேற்ற மறுநாள் Amir Ali Hajizadeh இவ்வாறு அறிக்கை வெளியிட்டள்ளார்.

சவுதி எண்ணெய் நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கு ஈரான் தலைமை தாங்குவதாகவும், ஏமனின் ஈடுபாட்டை நிராகரிப்பதாகவும், தவறான இராஜதந்திரத்தில் ஈடுபட்டதற்காக ஈரானை கண்டிப்பதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.

2015ம் ஆண்டு உலக சக்தி நாடுகளுடன் போடப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு ஜனாதிபதி டிரம்ப் விலகிக்கொண்ட நாள் முதல் ஈரான்-அமெரிக்க இடையே பதற்றம் நிலவி வருவது நினைவுக் கூரதக்கது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்