ஆண் வாரிசு இல்லை... நர்ஸ் வேடமிட்டு பெண் செய்த செயல்: 26 ஆண்டுகளுக்கு பிறகு அம்பலம்

Report Print Arbin Arbin in மத்திய கிழக்கு நாடுகள்
407Shares

சவுதி அரேபியாவில் இரண்டு மருத்துவமனைகளில் இருந்து 3 பச்சிளம் குழந்தைகளை திருடிச்சென்ற பெண்மணிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் மூன்றாவது குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மொத்தம் 5 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில், இருவரின் தண்டனையை மட்டுமே இதுவரை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் கடந்த 1993 ஜூலை 4 மற்றும் செப்டம்பர் 8 ஆம் திகதி லத்தீஃப் மருத்துவமனையில் இருந்தும் 1999 ஜூலை 21 ஆம் திகதி தம்மாம் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இருந்தும் நர்ஸ் வேடமிட்டு மறியம் என்பவர் ஆண் குழந்தைகளை திருடிச்சென்றுள்ளார்.

முதல் குழந்தைக்கு கணவரின் அனுமதியுடன் குடும்ப அட்டையில் பெயர் சேர்க்கப்பட்ட நிலையில்,

எஞ்சிய இரு குழந்தைகளின் பெயரை குடும்ப அட்டையில் சேர்க்க மறியத்தின் இரண்டாவது கணவர் மறுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் தமது மகன்களின் அடையாள அட்டை பெறுவதற்காக மறியம் மீண்டும் சவுதி அரசாங்கத்திடம் விண்ணப்பம் அளித்துள்ளார்.

ஆனால் அதில் குறிப்பிட்டிருந்த தகவல்களில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் சுமார் 26 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த கடத்தல் விவகாரம் அம்பலமானது.

ஆண் வாரிசு இல்லை என்ற காரணத்தாலையே, பிஞ்சு குழந்தைகள் மூவரையும் திருடியதாக மறியம் ஒப்புக்கொண்டுள்ளார்.

தொடர்ந்து டி.என்.ஏ சோதனை முன்னெடுக்கப்பட்டு, அந்த மூன்று இளைஞர்களையும் அவர்களின் உண்மையான பெற்றோரிடம் சவுதி நிர்வாகம் ஒப்படைத்துள்ளது.

கடத்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல், கல்வியும் குடியுரிமையும் மறுத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் மறியம் மற்றும் அவரக்கு உடந்தையாக இருந்த நால்வர் மீதும் வழக்கு பதியப்பட்டது.

தற்போது இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இருவரின் தண்டனை விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த சில நாட்களில் எஞ்சிய இருவரின் தண்டனை விவரங்களும் வெளியாகும் என கூறப்படுகிறது.

மேலும், இந்த வழக்கில் ஐந்தாவது குற்றவாளி வெளிநாட்டில் குடிபெயர்ந்துள்ளதால், அவரை சவுதி அரேபியாவுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகளை சர்வதேச பொலிசாரின் உதவியுடன் முன்னெடுக்கப்படுவதாக சவுதி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் மத்திய கிழக்கு நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்