பாக்கெட்டில் வைத்திருந்த போன் வெடித்து சிதறியது: வைரலாகும் வீடியோ

Report Print Santhan in மொபைல்
954Shares
954Shares
lankasrimarket.com

இந்தோனேசியாவில் பாக்கெட்டில் வைத்திருந்த நபர் ஒருவரின் ஸ்மார்ட் போன் வெடித்து சிதறியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தோனேசியாவின் தனியார் விடுதி ஒன்றில் பணியாற்றி வருபவர் யுலியான்டோ(47). இவர் கடந்த 30-ஆம் திகதி தான் வேலை பார்க்கும் விடுதியில் நின்று கொண்டிருந்த போது, திடீரென்று அவரது கேலக்ஸி கிரான்ட் டுயோஸ் போன் சூடானதால், அதை வெளியில் எடுப்பதற்குள் வெடித்துச் சிதறியது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பதறி போய் கீழே விழுந்து தனது சட்டையை வேகமாக கழற்றி வீசினார். அதன் பின் அருகில் இருந்த நபர் ஒருவர் அவரை அழைத்துச் சென்றார்.

இது தொடர்பான காட்சி அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகியதால், தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் சாம்சங் கேலக்ஸி நோட் 7 வெடித்ததால் விற்பனை நிறுத்தப்பட்ட நிலையில், இம்முறை கேலக்ஸி கிரான்ட் டுயோஸ் ஸ்மார்ட்போன் வெடித்து சிதறியுள்ளது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்