உள்ளங்கையினுள் அடங்கக்கூடிய நவீன ஸ்மார்ட் கைப்பேசி

Report Print Givitharan Givitharan in மொபைல்

பிரித்தானியாவிலுள்ள பிரபல கைப்பேசி வலையமைப்பு நிறுவனமான Vodafone ஆனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை அறிமுகம் செய்து வைத்துள்ளது.

Palm எனப்படும் இக் கைப்பேசியானது உள்ளங் கையில் அடங்கக்கூடிய அளவிற்கு மிகவும் சிறியதாக உள்ளது.

அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடியதாக இருக்கும் குறித்த கைப்பேசியானது Qualcomm® 435 Processor, பிரதான நினைவகமாக 3 GB RAM மற்றும் 32 GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

மேலும் இதன் திரையானது 3.3 அங்குல அளவுடையதும், 445 பிக்சல்கள் உடையதுமான HD தொழில்நுட்பத்தினைக் கொண்ட LCD திரையாக காணப்படுகின்றது.

இவற்றுடன் 8 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, அகற்ற முடியாது 800mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இதன் எடையானது வெறும் 62.5 கிராம்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers