5G ஹுவாவி கைப்பேசிக்கு தடை விதித்துள்ள நாடுகள்

Report Print Givitharan Givitharan in மொபைல்

அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுக்கு இடையேயான பொருளாதாரப் போட்டி காரணமாக ஹுவாவி நிறுவனத்தின் உற்பத்திகளுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளமை தெரிந்ததே.

இதனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஹுவாவி கைப்பேசிகளுக்கான அன்ரோயிட் அப்டேட்களை நிறுத்தியுள்ளது.

இப்படியிருக்கையில் மேலும் அதிர்ச்சி தரக்கூடிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது ஹுவாவி நிறுவனத்தின் புதிய சாதனங்களை அறிமுகம் செய்வதற்கு ஜப்பான் மற்றும் பிரித்தானியா என்பன தடை விதித்துள்ளன.

எனவே அந்நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்படவுள்ள 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்படாது என தெரிகிறது.

மேலும் மொபைல் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers